Irumudi

irumudi

* Sakthi Malai Irumudi Start From 10-Dec-2014 To 02-Feb-2015

Online Irumudi Booking only for District user.

* Online Irumudi Boooking -Click here

Special Train list for Irumudi Festival -Click Here

ஓம்சக்தி

இருமுடி ஏந்தி சித்தர்பீடம் வரும் பக்தர்களின் கவனத்திற்கு

1).சித்தர் பீடத்திலிருந்து வாங்கிய சக்தி மாலை மற்றும் இருமுடிப் பை மட்டுமே கொண்டு வர வேண்டும். அவரவர் தயாரித்தோ அல்லது வெளியில் வங்கியோ கொண்டு வருவது அனுமதிக்கப் படமாட்டாது.

2).ஒன்பதாவது மாலை வரை பக்தர்கள் செவ்வாடையிலும்,சிவப்பு பையுடனும் வர வேண்டும் . பத்தாவது மாலையிலிருந்து சிவப்பு கலந்த மஞ்சள் ஆடையில்,மஞ்சள் நிற இருமுடிப் பையுடன் வரவேண்டும். வேறு எந்த நிற ஆடையிலும் இருமுடி செலுத்த அனுமதி இல்லை.

3).குழந்தைகளுக்கு சக்தி மாலை அணிந்திருந்தால் அவர்களுக்குத் தனியாக இருமுடி அனுமதிச் சீட்டு கொண்டுவர வேண்டும்.

4).மாலை அணிந்து இருமுடிப் பையுடன் வரும் பக்தர்கள் மட்டுமே அபிஷேகத்திற்கு அனுமதிக்கப் படுவார்கள்.

5).முதலில் அரங்கில் நுழையும் பொறுப்பாளர்கள் தங்களது மன்ற சான்றிதழ் அல்லது ஆன்லைன் டிக்கட்டினை பதிவு செய்தல் வேண்டும் . அங்கு தரப்படும் சலான் கொண்டு தங்கள் பெயர் விலாசம் மற்றும் நாணய வாரியுடன் இருமுடி காணிக்கையை செலுத்த வேண்டும் .பின்னர் காணிக்கை ரசீதிணை காண்பித்து இருமுடி அனுமதிச் சீட்டு மற்றும் உணவு சீட்டை பெறுதல் வேண்டும்.

6).சக்தி மாலை அணிந்தவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் இருமுடிப்பை மற்றும் இருமுடி அனுமதிச் சீட்டை அவரவரே கொண்டு வரவேண்டும்.

7).பக்தர்கள் இருமுடி அனுமதிச் சீட்டு வாங்கிய பின் வரிசைக்கு வரவேண்டும்.

8).இருமுடி அனுமதிச் சீட்டு பெரும் இடத்தில் ஒவ்வொருவரும் அவரவர் இருமுடி அனுமதிச் சீட்டை கொடுத்து விட்டு உள்ளே செல்ல வேண்டும் .

ஓம்சக்தி.

facebooktwittergoogle_plusredditpinterestlinkedintumblrmail

Pooja Booking

News & Events

Gellery