Amma Message


  • அம்மா சொல்கிற நியமப்படி பயபக்தியோடு இருமுடி செலுத்தினால், பக்குவத்தோடு இருந்தால் தான் கேட்டது கிடைக்கும்.
  • எங்கெங்கு இருமுடி எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதோ அங்கங்கு பக்தி வளரும் அழிவுகள் குறையும்.
  • தொடர்ந்து இருமுடி செலுத்தக் கணக்குப் பார்க்காதே‚ நீ செலுத்தும் ஒவ்வொரு இருமுடிக்கும் பயன் உண்டு.
  • பொழுது போக்கிற்காக இருமுடி செலுத்தக் கூடாது.
  • நீ அணியும் சக்திமாலைதான் உனது மனசாட்சி.
  • மனித இனத்தை இறைவசமாக்க வேண்டியே இலவச இருமுடி போட்டு அழைத்துவரச் சொல்கிறேன்.
  • இருமுடியும் அன்னதானமும், உங்களையெல்லாம் இறைவசமாக்க உதவும் வழிகள்
  • நான் கூறும் விதி முறைப்படி உண்மையாக விரதமிருந்து இருமுடி ஏந்தி வரும் சக்திகளை அழிவிலிருந்து காப்பாற்றுவேன்.
  • மழை, வெள்ளம், இயற்கைச் சீற்றங்களிலிருந்து விடுபட இருமுடி ஏந்தி வரவேண்டும்.
  • உங்கள் பாவங்களைத் தணிக்கவே இருமுடி
  • இருமுடி விஷயத்தில் கணக்குப் பார்க்காதே
  • இருமுடித் தொண்டு பொறுப்பான தொண்டு‚ அத்தொண்டு என்றும் வீண் போகாது
  • இருமுடி செலுத்தினால் மட்டும் போதாது‚ பத்துப் பேருக்குத் தருமம் செய்ய வேண்டும்.
  • ஏழை, எளிய மக்களுக்கும் சக்தி மாலை அணிவித்து அழைத்து வருவது இந்த நாட்டிற்கும் நல்லது.
  • தொடர்ந்து இருமுடி செலுத்து‚ ஒன்பது மாலை போதும்‚ பத்து மாலை போதும்‚ என்று நிறுத்திக் கொள்ளாதே
  • விரதமிருந்து, கட்டுப்பாட்டை மேற்கொண்டு இருமுடி ஏந்தி வருகிற சிலருக்குக் காட்சி கொடுப்பேன்.
  • இருமுடி பிரிக்கும் போது பிரிப்பவர்களும் மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • கருவறையில் இருமுடி அபிடேகம் செய்யும்போது மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • கருவறையின் வாயிற்படியை மறைக்காமல் நின்றபடி அபிடேகம் செய்ய வேண்டும்.
  • உலகமே சிவப்பாகி, சிவப்பு மஞ்சளாகி, மஞ்சள் பச்சையாக மாறுகின்ற வாய்ப்பைக் கொடுக்க போகிறேன்.
  • ஆன்மிகம் என்பது எளிமையும் வலிமையும் கொண்டது.
  • ஆன்மா எப்பொழுது நினைக்கிறதோ அப்பொழுதுதான் உடலை விட்டுப் போகும்.
  • ஆன்மிகத்தில் அவ்வப்போது கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால்தான் பலன் கிடைக்கும்.
  • உணர்ச்சி வசப்படுதல், கோபப்படுதல் ஆகிய குணங்கள் ஒருவன் தன்னையே அழித்து விடும்.
  • இயற்கையில் உருவாகும் கல் அம்மனாகவும், சிவனாகவும் மாறுகிறது. 
  • அதுபோல மனிதனும் முயன்றால் தெய்வமாக மாறலாம்.
  • மருத்துவம், விவசாயம் ஆகிய எல்லாத் துறைகளுக்கும் கடல், ஆகாயம் போன்ற இயற்கை அவசியம்.
  • ஆன்மிகம், தொண்டு, தருமம் ஆகியவற்றில் சோம்பேறித்தனம் ஏற்பட்டால் அழிவு ஏற்படும்.
  • ஆலயத்தினால் உனக்குப் பெருமையே தவிர உன்னால் ஆலயத்துக்குப் பெருமை இல்லை.
  • ஆரம்பத்தில் எப்படி வந்து செயல்பட்டீர்களோ, அவ்வாறே இப்பொழுதும் செயல்பட வேண்டும். 
  • முடியாது என்று எதையும் சொல்லக்கூடாது.
  • உன்னை நினைக்க வைப்பதும் நான்.
  • நினைவாக இருப்பதும் நான்தான்.
  • வெளியில் இருப்பவன் உள்ளே வரமுடியும். 
  • உள்ளே இருப்பவன் வெளியே போனால் திரும்பி வரமுடியாது.
  • ஓய்வு நேரத்தை ஆன்மிகத்துக்காகப் பயன்படுத்த வேண்டும்.
  • ஆன்மிகத்தில் வழிகாட்டியாகவும் ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும்.
  • அரசியல் பற்றிக் கவலைப்படாமல் எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.
  • ஒரே எண்ணம்‚ ஒரே பார்வையில் இருக்க வேண்டும்.உழைப்பு குறைந்து போய் விட்டதால் பற்றாக்குறை அதிகமாகி விட்டது.
  • உனது தேவைகள், உனது வேதனைகள், உனது சோதனைகள் ஆகியவற்றை என்னிடம் விட்டு விடு.
  • ஆன்மா என்ற பாத்திரத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • நான் கூறுவனவற்றைத் தலையாட்டிக் கேட்டால் மட்டும் போதாது.  பொறுப்பேற்றுச் செய்யவும் வேண்டும்.உங்களுக்கு நான் கற்றுக் கொடுக்கும் ஆன்மிகத்தை நீங்கள் பலருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
  • பணத்திற்காகச் செய்யும் தொண்டு பிணத்துக்குச் சமம். 
  • பக்தியோடு செய்யும் தொண்டுதான் உண்மையானது.
  • தொண்டு செய்யாவிட்டால் துண்டு விழும். 
  • உண்மையான தொண்டு வெளிச்சத்துக்கு வரும். 
  • பொய்யான தொண்டு வெளிச்சத்துக்கு வராது.
  • நீ செய்கிறாய், நான் கொடுக்கிறேன்.  நான் கொடுப்பதை நீ நான்கு பேருக்குக் கொடுக்க வேண்டும்.  ஆனால் யாரையும் கெடுக்கக் கூடாது.
  • செவ்வாடை அணிபவர்களுக்குச் சேவை மனப்பான்மையும், செவிலித்தாய் மனப்பான்மையும் இருக்க வேண்டும்.
  • எப்பொழுதும் சந்தோஷத்துடனும், உண்மை உணர்வோடும் தொண்டு, செய்ய வேண்டும்
  • நீ இருக்கும் வரை வாழ்வதற்கு நான் வழிகாட்டியாக இருக்கிறேன். 
  • அமைதியாக வாழ்ந்து விட்டுப் போவெளியில் இருப்பவன் உள்ளே வருவான்.
  • உள்ளே இருப்பவன் வெளியில் போகாமல் பார்த்துக் கொள்.கணவன் மனைவியாகப் பொதுத் தொண்டில் ஈடுபடுவது கடினம். 
  • ஆனாலும் அப்படி ஈடுபட்டால் நல்ல பயன் உண்டு.
  • ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்களில் சென்று வழிபட்டாலே பயன் உண்டு.
  • ஆன்மிகத்தில் தொண்டுதான் முக்கியம்.அடிக்கடி தூசு தட்டுவது போல, தொண்டு, தருமம் உள்ளம் ஆகியவற்றை தட்டி எழுப்ப வேண்டும்.
  • தருமம், தொண்டு செய்து வந்தால் எந்த ஆபத்தும் இல்லை.ஆனால் பொறாமையும் அழுக்கும் சேர்ந்தால் ஆபத்து.
  • அம்மா இருக்கிறாள் என்று பாம்பு, தேள் இருக்கும் இடத்தில் கை வைக்கக் கூடாது.
  • அம்மா சொல்லிவிட்டார்களே என்று கடனே என்றும் செய்யக் கூடாது.
  • சாதாரண நிலையிலும் நான் அடிகளாரோடு இருப்பேன்.
  • ஆயிரத்தெட்டு முறை பாலகன் பார்வை எவன் எவன் மீது படுகின்றதோ அவனுக்கெல்லாம் ஜென்ம சாபல்யமடா.
  • நீ அடிகளாரிடம் கற்றுக்கொள்ள முடியாததை வேறெங்கும் சென்று கற்றுக்கொள்ள முடியாது.
  • நம் சித்தர் பீடத்தில் ஏழை பணக்காரன் அனைவரும் சமம். 
  • இவ்விடத்தில் பெண் சக்திகட்கு முன்னுரிமை உண்டு.
  • இங்கே வந்தால் உங்கட்குப் பணம் காசு கிடைக்கிறதோ இல்லையோ, மன அமைதி நிச்சயம் கிடைக்கிறது.
  • பக்தர்கட்கு அம்மாவின் பிரசாதங்களான குங்குமம், திருநீறு கொடுக்கும்போது, பயபக்தியுடன் கொடுக்க வேண்டும்.  எடுத்து வீசுவது போல் வழங்கக் கூடாது.
  • தெய்வத்துக்குச் செலவு செய்து யாரும் கடனாளியாவது இல்லை. 
  • மனிதர்க்குக் கடன் கொடுத்தவன் தான் இன்றைய பிச்சைக்காரன்.
  • தெய்வத்துக்குச் செலவு செய்து கெட்டவன் இல்லை
  • மனிதர்க்குச் செலவு செய்து வாழ்ந்து கெட்டவர் உண்டு.
  • பெண்கள் நகைக்காக அதிகம் செலவு செய்கிறார்கள். 
  • நகையால் ஆபத்துக்கள் தான் மிஞ்சும்.
  • அம்மா நம்மை வளர்க்கிறபோதே நாமும் நாலுபேரை வளர்க்கணும். 
  • கூடவே தான தருமங்களைச் செய்ய வேண்டும்.
  • வேள்விக்குழு‚ பிரச்சாரக்குழு‚ இளைஞர் அணி‚ மூன்றும் சூலத்தின் மூன்று கிளைகள் போன்றவை அதனைத் தாங்குகிற தாங்கிதான் நம் அம்மா‚
  • நம்மைத் தாங்கி நிற்பது அம்மாதான் என்பதை மறந்து விடக்கூடாது.நம் தொண்டர்கள் ஒரு குடும்பம் மாதிரி, ஆன்மிகத்தில் இணைந்து தொண்டுகள் செய்து வர வேண்டும்.
  • முதியவர்களிடம் அனுபவம் மிகுதி‚ எடுத்துச் செய்யும் ஆற்றல் இளைஞர்களிடம் மிகுதி‚உங்கள் மனசு சுத்தமாக இருக்க வேண்டும். 
  • உங்கள் உள் மனமும் சுத்தமாக இருக்க வேண்டும்.
  • நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருந்தால்தான் ஆலயமும் நன்றாக இருக்கும்.
  • ஆலயம் நன்றாக இருந்தால் தான் இயற்கையும் நன்றாக இருக்கும்.
  • இயற்கை நன்றாக இருந்தால் தான் பஞ்ச பூதமும் நன்றாக இருக்கும்.
  • பஞ்ச பூதங்கள் நல்லவனா கெட்டவனா என்று பார்ப்பதில்லை அம்மாவும் அது மாதிரிதான்‚பஞ்ச பூதங்கள் எல்லோர்க்கும் பொது‚ அம்மாவும் அது மாதிரி எல்லோர்க்கும் பொது‚வழிபாட்டை உரிய முறையில் மன ஒருமையோடும் செய்தால் தான் பலன் கிடைக்கும்.  
  • தொண்டு செய்யும் போது தானாகவே மனம் அதில் லயித்து விடுவதால் பலனும் உடனே கிடைக்கிறது.
  • ஒவ்வொருவர் உள்ளேயும் அம்மா இருக்கிறாள்.  எனக்குத் தெரியும். உங்கள் முற்பிறவி, உங்கள் துன்பம், அதற்கான காரணங்கள் எல்லாம் தான் தெரிகின்றன.
  • நம் இயக்கத்திலும் பெண்களிடம் ஆர்வமும் எழுச்சியும் அதிகம். 
  • அவர்கட்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
  • அம்மா என்னிடம் மட்டும் இல்லை‚ உங்கள் ஒவ்வொருவர் உள்ளேயும் அம்மா இருக்கிறாள்.
  • தியானம் செய்வதை விடத் தொண்டு செய்வது சுளுவானது.
  • உங்கள் மனத்தை ஒருமுகப்படுத்தித் தியானம் செய்யும்போது அம்மா, அதற்குக் கட்டுப்பட்டுப் பதில் சொல்ல வேண்டி வரும்
  • விழாக்களைக் கொண்டாடுவதன் மூலந்தான் பக்தர்களும் அன்பும், பக்தியும் வளர்வதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.
  • எந்த விழாவைக் கொண்டாடினாலும் உள்ளத்தில் உண்மை உணர்வும், பக்தி உணர்வும் கூடிய பண்பு தேவை.
  • விழாக்கள் என்பதெல்லாம் உங்களுக்குத்தானே தவிர, உங்களுக்குள்ளே இருக்கும் ஆன்மாவிற்கு அல்ல‚இங்கு நடைபெறுகிற விழாக்கள் எல்லாம், உங்களுடைய எதிர்கால வளர்ச்சிக்காக‚ விழாக்கள் எனக்கோ அடிகளார்க்கோ அல்லமரம், செடி வளர்வதற்கும் கவனிப்பு தேவை‚ அதுபோல ஆன்மிகம் வளர்வதற்கு விழாவும், தருமமும் தேவை‚விழாக்கள் மூலமாக வெளிஉலக அனுபவங்கள் கிடைப்பதுடன், உங்களுக்குப் பாவங்கள் சேராமல் பாதுகாப்பும் கிடைக்கிறது.
  • இங்கு விழாக்களைக் கொண்டாடுவது பெரிதல்ல. 
  • வருகிற பக்தர்களுக்குப் பக்குவத்தை உண்டாக்க வேண்டும்.
  • அமைதியை நிலைநாட்ட வேண்டும்.மனிதனின் மனம், செயல், பார்வை மூன்றம் ஒருநிலைப்பட வேண்டும்.  அதற்குத் தான் வேள்வி.
  • உங்கள் உள்ளம் கலங்கக் கூடாது. 
  • அது கறுப்பாக மாறக்கூடாது. 
  • உங்கள் பரம்பரையும், பாரம்பரியமும், காக்கப்பட வேண்டும்.
  • சித்திரைப் பௌர்ணமி முக்கியமான பௌர்ணமி‚ ஏதோ யாக குண்டம், ஏதோ பூஜை என்று நினைக்கக் கூடாது.
  • உலகத்துக்கு ஆன்மிகத்தை எடுத்துக் காட்டத்தான் சித்ரா பௌர்ணமி வேள்வி நடத்தப்படுகிறது.
  • உங்கள் மனத்தை ஒருமுகப் படுத்தும் பயிற்சி பெறவே விழாக்களை ஏற்பாடு செய்து தருகிறேன்.
  • வழிபாடுதான் மனிதனுக்கு நிம்மதியைக் கொடுக்கும். 
  • இறைவழிபாடு மனிதனின் அன்றாடக் கடமை.
  • தியானம்‚ யோகம்‚ என்று இருந்தால் மட்டும் போதாது. 
  • உடல் உழைப்பு வேண்டும்.  அந்த உழைப்புதான் பலன் கொடுக்கும்.
  • ஆண்டுக்குப் பலன் இருப்பதை விட வேண்டுதலுக்குப் பலன் உண்டு.
  • தத்துவங்களை இனிப்பாகப் பேசலாம்.  ஆனால் பத்து பேர் ஒன்று சேர்ந்து வழிபாடு செய்வதால் பயன் உண்டு.
  • மனத்தில் ஏற்படும் பொறாமைதான் கண் திருஷ்டியாக மாறுகிறது.
  • எதற்கும் மனம் உடையக் கூடாது.எங்கெங்கே முறையான வழிபாடு நடக்கின்றதோ, அங்கெல்லாம் நல்ல மழை உண்டு.
  • பஞ்ச பூத வழிபாட்டின் மூலம் வேள்வி செய்யும் போது மழை பெய்யும்.
  • ஒவ்வொரு விழாவிற்கும் ஓர் உயிர்ப்புத் தன்மை உண்டு. 
  • ஆன்மிகத்தில் இறைவழிபாட்டில் தாய் வழிபாடு சிறந்தது.
  • கண்களைத் திறந்து கொண்டு தியானம் செய்யப் பழக வேண்டும்.உலக வளர்ச்சிக்கும், தியான பயிற்சிக்கும் இங்கு ஏற்பாடு உண்டு.
  • கூட்டு வழிபாடு செய்யும் போது வீட்டைப் பற்றி நினைக்காமல் மன நிம்மதியுடன் வழிபாடு செய்தால் அதற்கு ஏற்ற பலனைக் கொடுப்பேன்.
  • மனக்கட்டுப்பாட்டுடன் செய்கின்ற தியானத்தினால் நீங்கள் பல பயன்களை அடையலாம்.
  • திருஷ்டி என்பது மனத் திருப்திக்காகக் செய்யக் கூடியது.
  • மனத்தில் உள்ள பதற்றமே திருஷ்டி எனப்படும்.சூலத்தில் மூன்று பிரிவுகள் உண்டு. 
  • பிறப்பு, இறப்பு, மன்னிப்பு என்ற கருத்தை உணர்த்துகிறது.
  • விலங்குகளும் மனிதர்களும் காட்டில் ஒன்றாக வாழ்ந்த போது பிரச்சனை இல்லை. 
  • மனிதன் தன் எண்ணங்களால் விலங்கினமாக மாறுகிறான்.கடன் கொடுத்துப் பணத்தைப் பாதுகாக்கலாம்.
  • ஆனால் கடத்திலில் ஈடுபடக் கூடாது.நீங்கள் எந்தப் படிப்பு படித்தாலும் அனுபவப் படிப்பு அவசியம்.நாகரிகம் என்ற பெயரில் விஞ்ஞானம் வளர வளர இயற்கை வளம் மாறுபடுகிறது.
  • வெளிநாடுகளில் இயற்கை வளம் எல்லாம் செயற்கை வளமாக மாறிவருகின்றன.நல்ல பரம்பரை நல்ல உலகத்தை உருவாக்கும்.
  • நல்ல ஆன்மா, அமைதி, தாய்மை இவைகள்தான் நல்ல உலகத்தை உருவாக்கும்.
  • பாத்திரத்தைத் தேய்மானம் வராமல் பாதுகாப்பது போல, உங்கள் மனத்தையும் தேய்மானம் இல்லாமல் பாதுகாக்க வேண்டும்
  • வந்த பாதையை நினைத்துப் பார்க்க வேண்டும். 
  • பொன், பொருள், பெண் ஆசை, ஆணவத்தை ஒழிக்க வேண்டும்.
  • ஒரே குணம்‚ ஒரே செயல் என்பதை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்
  • சக்கரம், தெய்வீகம், ஆன்மிகம் ஆகியவை மனிதனுக்கு அமைதியைக் கொடுக்கும்.
  • வாள் வீச்சு, சொல் வீச்சு என்பதெல்லாம் எடுபடாது. 
  • உள்ளத்தில் உண்மை வீச்சு இருக்க வேண்டும்.
  • வருங்காலத்தில் பூ, பொட்டு, மஞ்சள் என்ற மங்கலம் தரும் இயற்கைப் பொருள்களுக்குத்தான் மகிமை உண்டு. 
  • தங்கத்துக்கு மதிப்பு இருக்காது.
  • நீ எத்தனை சொத்து சேர்த்தாலும் நீ செய்யும் தருமம்தான் நிலையான சொத்தாக இருக்கும்.
  • பிறருக்குக் கொடுக்க வேண்டும். 
  • உழைத்து உயர வேண்டும்.
  • ஆன்மிகம்தான் எதிர்காலத்தில் மனிதனுக்கு உதவி செய்யும்.
  • உழைப்பு இல்லாமல் படிப்பையும் விஞ்ஞானத்தையும் நம்பிக் கொண்டிருந்தால் பயன் கிடைக்காது.
  • உங்கள் மனம்தான் உங்களுக்கு எதிரி. 
  • உங்கள் அடியாட்களே உங்களுக்கு எதிரியாக மாறிவிடுவார்கள்.பணம்தான் தெய்வம். 
  • தெய்வம்தான் பணம் என்று நினைக்கிறீர்கள். 
  • அதனால்தான் உலகத்தில் அழிவு ஏற்படுகிறது.உலகத்தில் பித்தலாட்டம் அதிகமாகி விட்டது.
  •   நல்ல ஆன்மா இருந்தும் ஒருவன் தருமமும் செய்வான் தீமையும் செய்வான்.
  •  எதை வைத்தும் ஒருவனை எடை போட முடியாது.
  • உங்கள் சொல்லும், செயலும் ஒன்றாக இல்லாதபோது, வேதனைகளும், சோதனைகளும் வரத்தான் செய்யும்.
  • ஒருவன் உழைக்கிறான்.  ஒன்பது பேர் தூங்குகிறார்கள்.  இதுதான் இன்றைய நாட்டு நிலை.
  • ஒரு பொருள் கையளவு இருந்தால் கைக்குள் அடங்கும்.  கைக்குள் அடங்காவிட்டால் சிதறி விடும்.
  • வம்பு, தும்பு, என்று இல்லாமல் அன்பு, பண்பு, பாசம் என்ற நிலையில் உன்னை வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஆணவம் வருவது அறியாமையால்தான்.  அறியாமையால்தான் அரிவாள் வெட்டும் ஏற்படுகிறது.
  • ஆலயம் வரும்போது ஆன்மா வளர வேண்டும். 
  • ஆணவம் ஒழிய வேண்டும்.
  • அம்மா என்று ஓடி வருகிறீர்கள்.  பலன் கிடைத்த பிறகு ஓடிவிடக்கூடாது. 
  • உறுதியான பக்தி வரவேண்டும்.
  • மனிதன் பொறாமைக் குணத்தால்தான் அதிக செலவு செய்கிறான். 
  • மகன் தந்தைக்குரிய கடமையைச் செய்வதில்லை.
  • பணம் பாதுகாப்பு இல்லாதது.  குணம் பிறரைப் பாதுகாப்பது
  • கருவறையில் அதுவும் சுயம்புகிட்டே சர்வ ஜாக்கிரையாய், எச்சரிக்கையாய் நடந்து கொள்ள வேண்டும்.
  • தினமும் மூல மந்திரம் 108 சொல்லி இரண்டு வேப்பிலை சாப்பிட வேண்டும்.
  • நீ தினமும் வேலையில் அமரும்போதும், அங்கிருந்து வீட்டிற்குச் செல்லும் போதும் ஒன்பது முறை ஓம்சக்தி சொல்லிவிட்டுச் செய்.
  • மந்திர வழிபாட்டில் உன் பாவங்கள் குறைவதோடு உன் ஊழ்வினை கரையவும் வாய்ப்புண்டு.
  • கஷ்டங்கள் வரும்போதெல்லாம் மந்திரநூல் படி‚ எல்லாவற்றையும் உருவேற்று‚
  • 108,1008 படித்து வந்தால் நீ வசிக்கும் மனை விளங்கும், மனையும் வாங்கலாம்.
  • மந்திரங்களை மனத்திற்குள் படித்தாலும் போதும்.யாராவது உன்னைத் திட்டினால் எதிர்த்துப் பேசாதே‚ மூல மந்திரம் சொல்
  • ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அம்மா மந்திரம் சொல்லி உருவேற்று
  • உனக்கு உடம்பு சரியில்லை என்றால் சக்தி கவசம் படி‚அங்கப் பிரதட்சணம் வரவேண்டும் என்று உள்ளுணர்வில் தோன்றினால் தயங்காமல் செய்து விடு.
  • உழைப்பில்லாது போனால் எல்லா நோயும் வரும்‚அம்மா... அம்மா... என்று பாசத்தோடு இங்கே வரணும்‚ இது நம் தாய்வீடு என்று நெனச்சிக்கிட்டு வரணும்‚
  • நீ பாசாங்கு பண்ணினால் அம்மாவும் பாசாங்கு பண்ணும் தெரிஞ்சுக்கோ‚செவ்வாடைகள் ஒன்று சேர்ந்தால் இந்த உலகத்தையே புரட்டலாம்‚பொருள் வேண்டுமா ? அருள் வேண்டுமா? அது இருந்தால் இது இல்லை‚ இது இருந்தால் அது இல்லை‚நாம் ஆன்மிகத்தை வளர்க்காவிட்டால் அணுகுண்டுதான் வளரும்.
  • கிராமத்துக்குப் போ‚ அங்கு வழிபாடு செய்‚ வேள்வி செய்‚ குருவாரம் வழிபாடு செய்‚கோயிலுக்கு எங்கே போனாலும் ஒழுக்கத்ததோடு போ‚ தவறு உணர்ந்து மன்னிப்பு கேட்டால் உன்னைக் காப்பாற்றுவேன்.இன்று எங்கும் பாதுகாப்பு இல்லே. 
  • பக்தி இல்லே.  சக்தி ஒளி வாங்கிப்படி அது உங்களுக்குச் சக்தியைக் கொடுக்கும்.
  • கடமையைச் செய்தாலே கடவுளைப் பார்க்கலாம் என்பதை உணர வேண்டும்.
  • பிறரை அன்பு, பண்பு, பாசம், தருமம் முதலிய நல்ல குணங்களால் அரவணைப்பதைத் தம் கடமைகளாகக் கருத வேண்டும்.
  • தருமம் இரத்தத்தில் ஊறிவிட்ட குணமாக இருக்க வேண்டும்.தீபாவளி போன்ற விழாக் காலங்களில் மட்டுமே பிறருக்கு உதவி செய்வது, தருமம் செய்வது என்னும் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
  • தருமம் செய்கிறோம் என்று வாயால் மட்டும் சொல்லாமல் உண்மையிலேயே தருமம் செய்வதிலேதான் பயன் வரும் நம்பிக்கை வளரும்.
  • கொடுப்பேன்‚ கொடுப்பேன்‚என்று சொல்வதை விடக் கொடுத்து விடுங்கள்‚ அந்தச் செயலே அன்பின் அடிப்படையாக மாறி விடும்.
  • இயற்கையை வணங்க வேண்டும். 
  • இயற்கையை தெய்வமாக வணங்கும் போது இயற்கை இருதயமாக மாறி மனிதனை வாழ வைக்கும்.
  • அறிவு, படிப்பு, சொத்து எல்லாம் இருந்தாலும் தெய்வத்தின் அருளும் வேண்டும்.
  • கற்றாழை நாருக்கும் கூந்தலுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.
  •   எதையும் பழகிப் பார்த்தால்தான் தெரியும்
  • தெய்வம் மனிதன் ஆகலாம்.  மனிதன் தெய்வமாகலாம்.  ஆனால் இயற்கையாக முடியாது.
  • மாடு கட்டி உழ வேண்டிய பழைய காலமே திரும்பும்.
  • மனிதன் இயற்கையை ஒட்டி வாழ முடியும். 
  • இயற்கையை வெட்டிக் கொண்டு வந்தால் வாழ முடியாது.
  • இயற்கை ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கிறது.  ஆனால் மனிதன் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு வாழ்வதில்லை.
  • ஆகாயம், பூமி முதலிய ஐம்பூதங்களும் தங்கள் வேலைகளைச் செய்தால்தான் இயற்கை வளம் கிடைக்கும்.பூமியும், ஆகாயமும்தான் உணவுக்கும், தண்ணீருக்கும் ஆதாரம்.
  • ஆதிபராசக்தியின் பாகங்கள் ஐந்து.  அவை (1) நிலம்  (2) நீர்  (3) நெருப்பு  (4) காற்று  (5) ஆகாயம்
  • உங்களுக்குக் கைகள் கொடுத்தது கடிகாரமும், மோதிரமும் அணிந்து கொள்ள அல்ல‚ உழைப்பதற்காக‚காதுகளைக் கொடுத்தது கம்மலை அணிந்து கொள்ள அல்ல.  நல்லதைக் கேட்பதற்காக‚மூக்கு கொடுத்தது மூக்குத்தி அணிவதற்காக அல்ல‚ வாசனை உணர்வதற்காக‚கண் கொடுத்தது மை தீட்டிக் கொள்ள அல்ல.  நல்லதைப் பார்ப்பதற்காக‚
  • நாவைக் கொடுத்தது கண்டதைப் பேசுவதற்காக அல்ல‚ நல்லதைப் பேசுவதற்காக‚தருமம்‚ ஆன்மிகம்‚ இயற்கை - இவை மூன்றும்தான் நிலையானவை.
  • இயற்கை இரையாகிக் கொண்டிருக்கிறது. 
  • இயற்கையைக் கரையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • தாயன்பு ஒருவிதமானது.  மகன் அன்பு ஒரு விதமானது.  மகள் அன்பு ஒரு விதமானது.
  • இயற்கையைச் செயற்கையாக மாற்றலாம்.  செயற்கையை இயற்கையாக மாற்ற முடியாது.
  • அனல், காற்று, ஆகாயம் என்ற இயற்கையின் வெளித் தோற்றம் தெரியுமே தவிர, அதன் உள்ளே உள்ள உயிர்த்தன்மை தெரியாது.
  • காய்க்காத மரத்திற்குப் பந்தபாசம் கிடையாது.  காய்க்கும் மரத்திற்குப் பந்தபாசம் உண்டு.விதை தூய்மையாக இருந்தால்தான் நிலத்தில் முளைக்கும்.  மனம் தூய்மையாக இருந்தால்தான் மண்ணுக்கும், பெண்ணுக்கும், உண்மைக்கும் மதிப்பு உண்டு.
  • ஆறு மழைக்காலத்தில் மணலைச் சேர்த்து, அடியில் மழை நீரைச் சேகரித்துக் கொடுக்கிறது. 
  • இன்று தண்ணீரும் பணமாக மாறிவிட்டது.செயற்கை உரத்தால் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளால் அழிவு உண்டு.ஒருபக்கம் மழை அதிகமாகப் பெய்து அழிவை உண்டாக்கும். 
  • இன்னொரு பக்கம் குறைவாகப் பெய்து அழிவை உண்டாக்கும்.ஏன் இந்த ஊழ்வினை என்று நினைக்கிறீர்கள். 
  • நீரிலிருந்துதான் மின்சாரம் கிடைக்கிறது.  மின்சாரத்தோடு நீர் சேர்ந்தால் அழிவு ஏற்படுகிறது.
  • இமயமலை இல்லையென்றால் ஜீவநதி இல்லை. 
  • குளிர் இல்லை என்றால் பனி இல்லை.  பனி நீராகிறது.  நீர் பனியாகிறது.
  • இயற்கை தாய் உள்ளம் போன்றது.  அத்தகைய இயற்கையான பஞ்ச பூதங்களே சீற்றம் கொண்டால் உங்களால் தாங்க முடியாது.
  • ஆடிப்பூர விழாவில் கஞ்சி ஊற்றுவதும், பாலபிடேகம் செய்வதும் மழைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்.
  • உன் சுற்றுப்புறக் கிராமத்து மக்களையெல்லாம் அழைத்து வந்து கஞ்சி ஊற்றச் சொல்‚ பாலபிடேகத்தில் பங்கு பெறச் சொல்‚கஞ்சிக்கு அலையாமல் இருக்க வேண்டுமானால் கஞ்சி ஊற்றச் சொல்‚அறிவு கொடுப்பது ஆன்மா‚ ஆன்மாவே அறிவு‚ அறிவே ஆன்மா.
  • இல்லறத்தில் துறவு உண்டு.  அத்தகைய பெண்கள் துறவியானால் அவர்களுக்கு மகா சக்தி உண்டு.
  • பெண்களுக்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தைவிட வேறு எந்த இயக்கத்திலும் முக்கியத்துவம் கொடுக்க முடியாது.
  • இன்றைய உலகில் ஒரு பத்து ரூபாயாவது சம்பாதித்தால்தான் பெண்களுக்கு மதிப்பு.
  • செவ்வாடை அணிந்த பெண்கள் வெள்ளையாடை அணிந்த தாதிகளாகப் பணிபுரியும் நிலைமை ஏற்படும்.
  • எதையும் கேட்டுக் கொண்டு, பலனை எதிர்பார்த்துக் கொண்டு ஆலயம் வரக்கூடாது.
  • பெண்களைக் கவர்ச்சிப் பொருளாக நினைக்கக்கூடாது.
  • ஒரு பெண் பத்து பேர்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்த வேண்டும்.
  • பெண்ணின் நல்ல உள்ளம்தான் நாட்டிற்கு மழை கொடுக்கும்.
  • அலங்காரம் அகங்காரமாக மாறி அல்லல்படக்கூடாது.
  • இரு பால்களால் கரு உண்டானாலும் தாய்க்குத்தான் முக்கியத்துவம் அதிகம்.
  • பெண் உருவத்திலும் ஆண்மை உண்டு. 
  • ஆண் உருவத்திலும் பெண்மை உண்டு.ஆசைக்கும், ஆணவத்திற்கும் இடம் கொடுக்கக் கூடாது.
  • பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.பெண் இனத்தை அன்னையாகவும், ஆதிபராசக்தியாகவும் நினைக்க வேண்டும்.
  • பெண்ணாக ஏன் பிறந்தோம் என்று நினைக்கக் கூடாது.  உலகில் தாய்ப்பாசம் சிறந்தது.
  • பெண்களிடம் ஆன்மிகத்தை ஒப்படைத்தால்தான் ஆன்மிகம் வளரும்.
  • பெண்களைச் சுட்டு கொலை செய்யும் நாட்டுக்குக் கேடு வரும்.
  • ஆதிபராசக்தி இயக்கத்தினால் மக்களுக்கு மன அமைதியும் உள்ளத்தில் பாசமும் உண்டு.
  • எது சொன்னாலும் பெண்கள் ஏற்றுக் கொள்வார்கள்.  அவர்களிடம் கேள்விக்குறி இல்லை.  ஆச்சரியக் குறி இல்லை.
  • பெண்களுக்குத் தாலியை வேலியாகக் கட்டினாலும், அவர்களிடம் பந்தமும் பாசமும் இருக்க வேண்டும்.
  • பலகோடி பேர் வந்தாலும் இங்கே பெண்களுக்கு முக்கியத்துவம் உண்டு.
  • மகளிர்க்கு அதிக சக்தியைக் கொடுத்துள்ளேன்.
  • கொடுக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • நான் ஒரு சக்தியாக இங்கு வந்திருப்பதால்தான் பெண்களை வைத்து ஆன்மிகம் வளர்க்கிறேன்.
  • ஆன்மிகத்தில் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதால் குடும்பம் காப்பாற்றப்படுகிறது.
  • நமது சித்தர் பீடம் புது மாதிரியான வழிமுறைகளைக் கொண்டது.
  • உலகத்தைக் காக்கும் பொறுப்பு இந்த ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிறது.
  • ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்களின் திருமண நாள்.
  • நாளைய உலகில் ஆதிபராசக்தி இயக்கத்தினால்தான், கல்வி, மருத்துவம், பண்பாடு போன்ற துறைகளில் முக்கிய பங்கு உண்டு. 
  • பெருமையும் உண்டு.
  • உலகமே ஆதிபராசக்தி இயக்கத்தில் அடக்கம்.
  • ஆதிபராசக்தி இயக்கம் எதிர்காலத்தில் சீரும் சிறப்புமாக இயங்கி, வழிகாட்டியாக அமையும்.
  • ஆன்மிகத்தில் இந்த ஆலயத்தில் உள்ள அமைப்பு போல வேறு எங்கும் கிடைக்காது.
  • பித்தளை பொன்னாவது போல நோய் உள்ளவர்கள் ஆதிபராசக்தி சந்நிதியை மிதிக்கும் போது அந்நோய் மறைந்து விடுகிறது.
  • பள்ளத்தை நாடித்தான் தண்ணீர் ஓடும். 
  • நல்ல உள்ளத்தை நாடித்தான் நல்ல எண்ணங்கள் தோன்றும்
  • நல்ல பூமியில்தான் பயிர்கள் செழுமையாக வளரும்.
  • மருவத்தூரில்தான் மகிமை இருக்கும்.எப்படி இருந்த மருவத்தூர் எப்படி மாறி இருக்கிறது ? என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
  • படித்தவன், படிக்காதவன் என அனைவருக்கும் படியளக்கும் தன்மை இங்கே உண்டு.
  • மருவத்தூர் உங்களுக்கு மருந்தாக அமையும்.
  • மருவத்தூரைப் பற்றிப் பொறாமைப்படுபவர்கள் உண்டு. 
  • ஒரு பகுதி மக்களுக்கு நல்ல பார்வை கிடையாது.
  • ஆன்மிகத்தில் ஈர்ப்புத் தன்மை இங்குதான் (மேல்மருவத்தூரில்) உண்டு
  • திருடு, பொறாமை, பொச்சரிப்பு எல்லாம் உலகில் உண்டு. 
  • மருவத்தூரைப் பார்த்துப் பொறாமை அதிகம் உண்டு.சர்க்கரையைப் பாகு எடுத்துப் பயன்படுத்திக் கொள்வது போல அருள்வாக்கைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • என் அருள்வாக்குகள் எதிர்காலத்தில் கல்வெட்டில் பதிக்கப்பட வேண்டியவை.இந்த இயக்கம் இல்லாவிட்டால் தொண்டும் தருமமும் இல்லை.
  • அருள்வாக்குதான் மருவத்தூரின் அழியாத சரித்திரம். 
  • ஆன்மாக்கள் சுற்றுவதும் இங்குதான்.
  • ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம், தர்மம், தொண்டு, பக்தி, அடிகளார் வழிகாட்டுதல் - இவற்றால்தான் கரையேற முடியும்.
  • அருளும், பொருளும், நிம்மதியான வாழ்க்கையும் இங்குதான் உண்டு.இயற்கை வழிபாடு செய்கின்ற ஒரே ஆலயம் மருவத்தூர் ஆலயம்தான்.
  • இங்கே சலசலப்பு இருக்கக் கூடாது. 
  • கலகலப்பு இருக்க வேண்டும்.
  • ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தை எப்படி உடைக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
  • அந்த மண்‚ இந்த மண்‚ என்று எந்த மண்ணாக இருந்தாலும் இந்த மேல்மருவத்தூர் மண்ணுக்கு மகிமை உண்டு.
  • உன் ஆன்மா பரிசுத்தமாக இருக்க வேண்டும்.  அதன் பிறகுதான் நான் சொல்வதெல்லாம் புரியும்.
  • நவராத்திரி விழாவின் போது மௌனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
  • பத்து நிமிடம் தியானம் இருந்து. நீ செய்த செயல்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.
  • எப்போதும் வேலை, சிந்தனை என்றே இருந்தால் தேய்மானம் உண்டு.  அழிவு உண்டு.  சிந்தனையும், பார்வையும் மங்கலாகும்.
  • மனதை ஒருமுகப்படுத்தித் தியானத்தில் இருந்தால் தேய்மானம் குறையும்.
  • ஒரே சீரான உணவு இல்லையென்றால் உடலுக்கு ஆபத்து.
  • எலுமிச்சம்பழச்சாறு, வேப்பிலை, சுக்கு, மிளகு அனைத்தையும் வெந்நீரிலோ, பாலிலோ கலந்து அவ்வப்போது குடித்து வருவது நல்லது
  • கொத்துமல்லி, துளசி, வேப்பிலை, இஞ்சிச்சாறு பிழிந்து இவற்றுடன் தேன் கலந்து அருந்துவது நல்லது.
  • கண்ட கண்ட இடங்களில் உணவைச் சாப்பிட்டால் உடலுக்குக் கேடு.
  • வாரத்திற்கு ஒருநாள் ஒரு வேளை சாப்பிட வேண்டும்.  பச்சைக் காய்கறிகளைச் சாப்பிட வேண்டும்.
  • மனிதனுக்கு உப்பும், சர்க்கரையும் அவசியம்.  இவை அதிகமானால் உடல் நலனுக்குக் கேடுதான்.
  • சுவை நாவில் மட்டுமே உண்டே தவிர, உள்ளத்தில் இல்லை.
  • நொச்சி இலை, தும்பைப் பூ, தும்பை இலை, நெருஞ்சி முள், நீலகிரி இலை, வேப்பிலை இவற்றை அரைத்துக் காய்ச்சித் தடவ வேண்டும்.
  • உலகம் என்னுடையது.  அதனை இயக்கும் சக்தியே ஆதிபராசக்தி‚
  • ஆலயத்தை வியாபாரமாக்கக் கூடாது.  வியாபாரத்துக்காக ஆலயம் வரக்கூடாது.
  • சக்திக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை.  சக்தியே சாதிக்கும் தன்மை படைத்தது.
  • ஓடுவதும் நானே‚ உடைவதும் நானே‚ காடும் நானே‚ களர் நிலமும் நானே‚ பார்க்கும் பொருளும் நானே‚ பார்க்கப்படும் பொருள்களும் நானே‚
  • எனக்கு உருவம் கிடையாது.  என்னுடைய தோற்றங்கள் அணு‚ சோதி‚ குழந்தை‚ பாம்பு‚ விளக்கு‚ சித்தர்‚ முதலியன ஆகும்.
  • தேவர்களுக்கும் சித்தர்கள் உண்டு.  தேவிகளுக்கும் சித்தர்கள் உண்டு.  சித்தர்களின் தலைவி நானே‚
  • என்னையும் என் வழிமுறைகளையும் ஆராயாதே‚ அவை உன் மூளைக்கு எட்டா‚
  • இங்கே ஆலயத்திற்கு அடிக்கடி வந்து செல்வதன் காரணமாகப் பல ஆபத்துக்களிலிருந்து நீங்கள் காப்பாற்றப் படுகிறீர்கள்.
  • இங்கே தியானம் செய்துவிட்டுச் சென்றால் இங்கு வந்து செல்வதற்கான முழுப்பலன் உண்டு‚
  • இந்த மண்ணை மிதித்தாலே அதற்கு ஏற்ற பலன் உண்டு.
  • கலச விளக்குகளுக்கு விலை வைப்பது உன் பாவமூட்டை குறைய‚
  • தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள ஆன்மா அவசியம்.  அதற்கு என் அருள் தேவை.
  • தன்னால் ஆக்கப்பட்டது ஊழ்வினை‚  பிறரால் செய்யப்படுவது செய்வினை‚
  • பிறப்பு, வளர்ப்பு, இறப்பு என்று உண்டு.  மழை பெய்து கடலை அடைவது போல ஆன்மா மறுபிறவியை அடைவது உண்டு.
  • நேர்மையாக உழைத்து வியர்வை சிந்திப் பெறுகிற பொருள் தான் உனக்கு நிலைக்கும்.  மற்றவை நிலைக்காது
  • தும்பை, நொச்சி, துளசிச்சாறு பிழிந்து வெந்நீரில் போட்டு ஆவிபிடிப்பது நல்லது.
  • போன காலம் பொன்னான காலம்.  இனி வரும் காலம் வம்பான காலம்.
  • இனி வரும் காலங்களில் அடிகளார் பார்வையும், பாதமும் கிடைப்பது அரிது.
  • ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தில் இருப்பது நீ செய்த புண்ணியம் என்று நினைக்க வேண்டும்.
  • அடிகளார் என்ற பொக்கிஷத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • அம்மாவா? அடிகளாரா? என்ற சந்தேகத்தை வைத்துக் கொண்டு மின்சாரம் இருக்கிறதா? என்று மின்கம்பியைத் தொடுவது போல் ஆகிவிடாதே.
  • ஆதாரம் இல்லாமல் உங்கள் ஆதாயத்திற்குத்தான் அருள்வாக்குச் சொல்கிறேன்.
  • குருவை எங்கு தரிசனம் செய்தாலும் காயோ, கனியோ உன்னால் முடிந்ததைக் காணிக்கையாக வைக்கலாம்.
  • அம்மா அருள்வாக்கு, அடிகளார் அருள்வாக்கு, தெய்வ அருள்வாக்கு எல்லா அருள்வாக்குகளும் ஒரு வாக்குதான்.
  • எதிர்வரும் காலங்களில் பாலகனைப் பார்க்கவும், பக்கத்திலிருந்து பேசவும், பேசுவதைக் கேட்கவும் வாய்ப்பில்லாமல் போய்விடும்.
  • அடிகளாரிடம் பற்றும் பாசமும் வைத்து அவரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • குருவை வைத்து ஆன்மிகத்தில் உருக வேண்டும்.  பக்தியைப் பருக வேண்டும்.
  • அடிகளார் பிறந்த நாளில் பாதபூஜை செய்யும் போது, பாதத்தில் வைத்த குங்குமத்தை எடுத்து உங்கள் நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். 
  • அடிகளார் மனத்தில் இடம்பிடித்து அவனது அன்புக்குப் பாத்திரமாக வேண்டும்.
  • அடிகளார் அசைவால் ஆக்கவும் முடியும்.  அழிக்கவும் முடியும்.
  • ஆலய பணிகளை உண்மை உணர்வுடன் செய்ய வேண்டும்.
  • ஆன்மிகத்தில் அடிகளாரின் ஒவ்வொரு உணர்வுக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு.
  • தெய்வத்துக்கு முக்கியத்துவம் உண்டு.  அதுபோல மனித தெய்வத்துக்கு முக்கியத்துவம் உண்டு.
  • ஒவ்வொரு துறையிலும் அதர்மம் உண்டு.  ஆன்மிகத் துறையை விடாமல் அடிகளாரைப் பற்றிக் கொள்ள வேண்டும்.
  • அடிகளாருக்காக நீ எந்தப் பிரார்த்தனை செய்தாலும் பலன் உனக்குத்தான் கிடைக்கும்.
  • உலகத்தை ஆட்டிப் படைக்கும் சக்தி அடிகளாருக்கு உண்டு.
  • அடிகளார் பாதம் மண்பாண்டம் போன்றது.  அதைக் கவனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • அடிகளாரும், அம்மாவும் நினைத்தால்தான் இங்கு எதுவும் நடக்கும்.  அவர்களை நினைக்க வைக்க வேண்டும்.
  • அடிகளார் பார்வைக்குச் சக்தி உண்டு.  அடிகளார் ரூபத்தில் என்னைப் பார்ப்பதால் அடிகளார் மூலம்தான் அருள் கிடைக்கும்.
  • அடிகளார் பிறந்த நாளன்று ஏழை எளியவர்களுக்குத் தான தருமம் செய்துபார்.  அதற்கு ஏற்ற பலன் உனக்குக் கிடைக்கும்.
  • புளி, உப்பு, வெந்நீர் மூன்று கலந்து காலையிலும், இரவிலும் வாய் கொப்புளிக்க வேண்டும்.  தொடர்ந்து செய்து வந்தால் பல், ஈறு பற்றிய நோய்கள் குணமாகும்.
  • மூட்டு வலிக்கு வேப்பெண்ணெயைச் சூடு செய்து, பச்சை கற்பூரம் போட்டுத் தேய்க்க வேண்டும்.
  • அத்தி, விளாம்பழம், பேரிக்காய் உடலுக்கு நல்லது
  • விஞ்ஞானி உலகை அழக்கிறான்.  ஆன்மிகவாதி உலகைக் காக்கிறான்.
  • விஞ்ஞானம் எவ்வளவு விரிவடைகிறதோ அந்த அளவுக்கு அழிவும் உண்டு
  • இயற்கைச் சூழிநிலையில்தான் வளர்ச்சி ஏற்படும்.  மலையிலும் செடி கொடி இருந்தால்தான் மலைக்கு அழகு.
  • விஞ்ஞானத்தினால் ஒரு பங்கு வளர்ச்சியிருந்தாலும் மூன்று பங்கு அழிவு உண்டு.
  • எவ்வளவுக்கெவ்வளவு விஞ்ஞானத்தை அணுகுகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு அழிவுதான் ஏற்படும்.
  • விஞ்ஞானத்தால் துப்பாக்கியை உற்பத்தி செய்து, உனக்கே நீ அழிவு தேடிக் கொள்கிறாய்.
  • தண்ணீர், பூமி, காற்று இவற்றையெல்லாம் விஞ்ஞானத்தால் உற்பத்தி செய்ய முடியாது.
  • அணு சக்தியினால் தெய்வ சக்தியையும், ஆன்மிக சக்தியையும் ஒன்றும் செய்ய இயலாது.
  • அணு ஆயுதங்களைப் பாமர மக்களை அழிக்கத்தான் கண்டுபிடித்தார்களே தவிர, காட்டில் உள்ள விலங்குகளை அழிக்க அல்ல.
  • ஓம் சக்தி என்ற ஓங்காரம் எங்கும் ஒலிக்க வேண்டும்
  • தைப்பூசம் என்றால் இருமுடி செலுத்த வேண்டும்.
  • நவராத்திரி வந்தால் லட்சார்ச்சனை செய்ய வேண்டும்.
  • ஆடிப்பூரம் என்றால் கஞ்சி எடுக்கச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் அலுத்துக் கொள்ளக் கூடாது.
  • உனது ஊழ்வினை தணிவதற்காகவே இவற்றையெல்லாம் செய்யச் சொல்கிறேன்.
  • கிராமம் நகரமாகியது நகர் நரகமாகியது.
  • இப்போது நகர வாழ்க்கையும் நரக வாழ்க்கைபோல் ஆகிக் கொண்டுள்ளத
  • இன்பமான இயற்கையான வாழ்க்கைமுறை மாறி இயந்திரமான நடைமுறை வாழ்க்கை வழக்கமாகிவிட்டது.
  • மற்றவர்களுக்குத் தான் செய்யும் உதவி என்பதே நமக்குத் தானே செய்து கொள்ளும் மாண்பு எனும் பக்குவம் வர வேண்டும்.
  • தெளிந்த நீரோடை போல் பிறரிடம் அன்பு காட்டிய மனங்களில் இன்று தீய எண்ணங்கள் புகுந்து விட்டன.
  • பொதுநலக் காரியங்களில் இன்று சுயநலம் கலந்ததால் அவற்றை அழிக்கத் தீவிரம் காட்டத் தீவிரவாதிகள் உருவாகி விட்டனர்.
  • காடுகள் அவர்களுக்கு மறைவிடம் ஆயின.  காட்டிலுள்ள மிருகங்கள் அவர்களுக்கு அங்கு இடம் விட்டு விட்டு நாட்டுக்குள் வருகின்றன.
  • அருள்வாக்கு கேட்டு நடந்த அந்தக் காலம் அருட்காலமாக இருந்தது.
  • தீப வழிபாட்டால் இருள் நீங்குவது போல, இயற்கை வழிபாட்டால் மன இருள் நீங்கும்.  இன்னல்கள் நீங்கும்.இயற்கையை இறைவனாகப் பார்க்க வேண்டும்.  இயற்கை இல்லையேல் வாழ்க்கையில் எதுவும் இல்லை.
  • வாழ்க்கையின் ஆதாரம் பொருளாதாரம் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
  • பொருளாதாரம் என்பது மனித வாழ்வின் ஆதாரத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
  • ஒரு மரத்திற்கு ஆணிவேர் எவ்வளவு முக்கியமோ, அது போல ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு ஆன்மிகம் முக்கியம்‚
  • ஒரு விதை என்று இருந்தால் அது பயிராக வேண்டும்.  பலருக்குப் பயனாக வேண்டும்.  இல்லையென்றால் அது பதரே‚ யாருக்கும் பயனற்ற பதர்‚
  • மனிதனும் பயிராக வளர்ந்து பலருக்கும் பயன்பட வேண்டும்.  ஒரு பதராக வாழக் கூடாது.