அன்னையின் அருள்வாக்கு

Published : 2016-03-19 04:30:00 | Author : சக்தி

விகளும்: பூதகணங்களும்:
“உலகத்தில் பூதகணங்கள் , ஆவிகள் எல்லாம் உண்டு.”
ஆன்மிகத்தில் ஆழமான ஈடுபாடு:
“ஒரு செடி வளர முதலில் விதை வேண்டும். அந்த விதையை ஊன்ற மனம் வேண்டும். அந்த விதையை ஆழமாக ஊன்ற வேண்டும். அதனை ஊன்றுவதற்கு ஏற்ற பூமி வேண்டும். அது நன்கு வளர்வதற்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதுபோல, ஆன்மிகத்திலும் நீங்கள்  ஆழமான ஈடுபாடு வைத்துக் கொள்ள வேண்டும். எந்த அளவிற்கு ஆழமான ஈடுபாடு இருக்கிறதோ அந்த அளவிற்குத் தக்கபடி பயன் கிடைக்கும்.”


"ஒரு குடிகாரன் போதையில் இருக்கும் போது அடித்தால் அவனுக்கு எந்த வலியும் தெரிவதில்லை. போதை தெளிந்தவுடன் வலி தெரிகிறது. அந்த வலியும் அவனது உடலுக்கே தவிர ஆன்மாவுக்கு அல்ல. ஆன்மிக போதை ஏற்பட்டு விட்டால் அது என்றும் தெளியாது. அந்த போதை தான் மேலானது, உயர்வானது."



ஆன்மிக போதை:

“ஒரு குடிகாரன் போதையில் இருக்கும் போது அடித்தால் அவனுக்கு எந்த வலியும் தெரிவதில்லை. போதை தெளிந்தவுடன் வலி தெரிகிறது. அந்த வலியும் அவனது உடலுக்கே தவிர ஆன்மாவுக்கு அல்ல. ஆன்மிக போதை ஏற்பட்டு விட்டால் அது என்றும் தெளியாது. அந்த போதை தான் மேலானது, உயர்வானது.”


"நாளைய உலகம் ஆன்மிக உலகம் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன். அதற்கு ஏற்ற சூழ்நிலைகளையும் வளர்ச்சிப் பணிகளையும் நீங்கள் திட்டமிட்டுச் செய்ய வேண்டும்."



நாளைய உலகம்:

“நாளைய உலகம் ஆன்மிக உலகம் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன். அதற்கு ஏற்ற சூழ்நிலைகளையும் வளர்ச்சிப் பணிகளையும் நீங்கள்  திட்டமிட்டுச் செய்ய வேண்டும்.”


சுயநலத்திற்காகக் கூடாது:

“உங்கள்  சுயநலத்திற்காக ஆன்மிகத்தைப் போர்வையாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. உண்மை உணர்வுடன் ஆன்மிகத்தில் ஈடுபட வேண்டும். அப்போது தான் வளர்ச்சி பெற முடியும்.”


ஆன்மாவுக்குப் பால் வேற்றுமை இல்லை:

“ஆன்மா ஆண் உருவத்திலேயும் உண்டு; பெண் உருவத்திலேயும் உண்டு. ஆன்மாவில் ஆண், பெண் வேறுபாடு இல்லை. அந்த வேறுபாடு உடம்பால் அமையும் வேறுபாடே!”


ஆன்மாவும் தருமமும்தான் காப்பாற்றும்:

"ஒருபக்கம் அழிவு; ஒருபக்கம் வளர்ச்சி; ஒருபக்கம் மேடு; ஒருபக்கம் பள்ளம்! எவன் வந்தும் எதையும்சரிப்படுத்த முடியாது. சமப்படுத்த முடியாது.சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்.
ஆன்மாவும் தருமமும்தான் ஒருவனைக் காப்பாற்றும். சூரியனைப் பிடித்து விடலாம். சந்திரனைப் பிடித்து விடலாம். கடலைக் கடந்து விடலாம் என்றெல்லாம் நினைக்கிறான். ஆன்மாவைப் பிடிக்க வேண்டும். அன்பையும் பாசத்தையும் பிடிக்க வேண்டும். இவற்றைப் பிடிக்காமல் அவற்றைப் பிடித்துப் பயன் இல்லை.”


அரசியலும் ஆன்மிகமும்:

“வெட்டு, குத்து, வேண்டுமென்றால் அரசியலுக்குப் போ! மனநிம்மதி வேண்டும், சுபிட்சம் வேண்டும், மழை வேண்டும் என்றால் ஆன்மிகத்திற்கு வா!”


கண் திருஷ்டிக்குள்ள சக்தி:

“ஒரு மனிதனின் கண் ஒளிக்கு ஒரு வீட்டை எரிக்கும் சக்தி உண்டு. மற்றவன் வாழ்க்கையையும் எரிக்கும் சக்தி உண்டு.”


மாயையை வெல்ல:

“தொலைவில் உள்ள கானல் நீரைக்கண்டு உண்மையான நீர் என்று ஓடி ஏமாறுகிறாய். சூரிய ஒளியில் பிரகாசிக்கும் ஒரு கண்ணாடிக் கல்லைப் பார்த்து வைரம் என்று நம்பி ஏமாறுகிறாய். மாயை காரணமாக என்னை விட்டுவிட்டு வேறிடங்களுக்குச் சென்று ஏமாறுகிறாய். வெறும் தோற்றத்தைக் கண்டு நம்பி ஏமாறாமல் என்னையே பற்றிக் கொண்டிருப்பவன் மாயையை வெல்வான். பொய்த் தோற்றம் கண்டு ஏமாறமாட்டான். உண்மையான வைரத்தை அடைவான்.”


ஆன்மிகம் என்ற மலைமேல் ஏறி வரும்போது...

“ஆன்மிகம் என்கிற மலைமேல் ஏறி வருகிறபோது பந்தம், பாசம் என்கிற முட்கள் படர்ந்திருக்கும். அவை குத்தும். எனவே, பந்த பாசங்களை அப்புறப்படுத்திவிட்டு “அம்மா” என்கிற கயிற்றைப் பிடித்துக் கொண்டு ஏறிவரவேண்டும். ஐயோ கால் சுளுக்குமே என்ற சந்தேகம் வரக்கூடாது. அம்மாவின் அருள் கிடைக்கும் என்ற ஒரே சிந்தனையோடு மேலே ஏறிவர வேண்டும்.”