அருள்திரு அம்மாவின் 76-ஆம் ஆண்டு அவதாரத் திருநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்

Published : 2016-03-19 04:50:00 | Author : சக்தி

ன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் 76-ஆம் ஆண்டு அவதாரத் திருநாளை முன்னிட்டு மேல்மருவத்தூர் எம்.ஏ.எஸ்.எம் அரங்கத்தில் (MASM HALL) வருகிற 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி (மாசி மாதம் 8-ம் தேதி) சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்படும்.

பரிசோதனையில் தேர்வு செய்யப்பட்டு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு 20.02.2016 சனிக் கிழமை, 21.02.2016 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (MAPIMS) இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்யப்படும். ரூ.1000/- பெறுமானமுள்ள விழிலென்ஸ் (IOL) பொருத்தப்படும். உணவு, மருந்துகள் , கண் கண்ணாடி அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

கண் பார்வைக்கோளாறு உள்ளவர்களுக்கு ரூ.500/- மதிப்புள்ள கண் கண்ணாடி இலவசமாக வழங்கப்படும். கண் சிகிச்சையை இலவசமாகப் பெற விரும்புகிற அன்பர்கள் 20.02.2016 சனிக்கிழமை காலை 7 மணி அளவில் எம்.ஏ.எஸ்.எம் அரங்கத்திற்கு வந்து சேரும்படி அன்புடன் வேண்டப்படுகிறார்கள் .