அன்புப் பால் தந்த இன்பப்பால்

Published : 2016-03-19 04:35:00 | Author : சக்தி லி. முனுசாமி , திருவேற்காடு, சென்னை

டந்த 27 ஆண்டுகளுக்கு முன் சென்னை கிண்டியிலிருந்து மேல்மருவத்தூருக்கு பிரச்சார எழுச்சியாக சுமார் 1000க்கு மேல் செவ்வாடை பக்தர்கள்  பாத யாத்திரையாகப் புறப்பட்டோம். இந்தப் பாத யாத்திரை டீம் (TEAM) நிறுவனத் தலைவர் திரு. சி.எச். கிருஷ்ணமூர்த்தி ராவ் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

மதிய உணவு குரோம்பேட்டையில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் வழங்கப்பட்டது. உணவு முடிந்ததும், நாங்கள் அங்கிருந்து பாதயாத்திரையாக இரவு டீம் கம்பெனியில் தங்கி உணவு வழங்கப்பட்டது. அப்போது பாதயாத்திரையில் கலந்து கொண்ட சக்திகளில் சிலருக்கு கால் பாதத்தில் கொப்புளம் ஏற்பட்டது. வேப்பிலையை அரைத்து அந்தக் கொப்புளத்தின் மீது தடவப்பட்டது. அந்த நேரம் எனக்குக் காய்ச்சல் ஏற்பட்டு நடக்க முடியவில்லை.

அம்மாவின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு இரவு ஓய்வு எடுத்துக் கொண்டேன். இந்தத் தகவலை அப்போது மாவட்டத் தலைவராக இருந்த சக்தி சிவசுப்ரமணியம் சென்னையில் உள்ள என் மனைவிக்கு தகவல் கூறியிருக்கிறார். தகவல் கேட்டவுடன் என் மனைவி வீட்டிலுள்ள அம்மா படத்திற்கு முன் நின்று


‘எனக்கு உடம்பு சரியாக வேண்டும் என்றும் நான் பாதயாத்திரையை எந்தவிதத் தடங்கலின்றித் தொடரவேண்டும்’


‘எனக்கு உடம்பு சரியாக வேண்டும் என்றும் நான் பாதயாத்திரையை எந்தவிதத் தடங்கலின்றித் தொடரவேண்டும்’ என்றும் வேண்டிவிட்டுப் படுக்கைக்குச் சென்றிருக்கிறார். காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் பாதயாத்திரையைத் தொடர்ந்து பயணமானேன். என் வீட்டில் உள்ள என்னுடைய மனைவிக்குத் தூக்கம் வராமல் மீண்டும் அம்மா படத்திற்கு முன் அமர்ந்து வேண்டிக் கொண்டுள்ளார். இரவு 2 மணி அளவில் வெளிக்கதவைத் திறந்து பார்த்துவிட்டு திரும்பவும் படுக்கச் சென்றிருக்கிறார்.

உறக்கம் வராமல் இருந்ததால் அம்மாவின் மூலமந்திரத்தை மீண்டும் தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருந்துள்ளார். அரைமணி நேரம் கழித்து மீண்டும் வெளிக்கதவைத் திறந்து கொண்டு வந்தபோது வெளியில் போடப்பட்ட பெஞ்சின் மீது அம்மா சிரித்த முகத்துடன் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்துவிட்டு “ஓம்சக்தி!” என்று அம்மாவை நோக்கிக் கூறியிருக்கிறார்.


காவலுக்கு வந்த அம்மா என் மனைவியைப் பார்த்துச் சிரித்தபடி “அவன் நன்றாக நலமுடன் பாதயாத்திரையை நிறைவு செய்து விட்டு வீட்டுக்கு வந்து விடுவான். மனதில் ஒன்றும் கவலைப்படாதே போய் உறங்கு” என்று கூறியிருக்கிறார்கள்



காவலுக்கு வந்த அம்மா என் மனைவியைப் பார்த்துச் சிரித்தபடி “அவன் நன்றாக நலமுடன் பாதயாத்திரையை நிறைவு செய்து விட்டு வீட்டுக்கு வந்து விடுவான். மனதில் ஒன்றும் கவலைப்படாதே போய் உறங்கு” என்று கூறியிருக்கிறார்கள் . என் மனைவி அம்மாவை உள்ளே வரச்சொல்லியிருக்கிறார்கள் . “பரவாயில்லை நான் இங்கேயே உட்கார்ந்து இருக்கிறேன். கவலைப்படாதே. நீ போய் தூங்கு” என்று கூறியிருக்கிறார்கள் . பிறகு கதவை மூடி விட்டு உறங்கச் சென்றுள்ளார். நன்றாக விடிய விடிய உறங்கியுள்ளார்.

காலையில் எழுந்து வந்து வெளிக் கதவைத் திறந்து பார்த்தபோது அங்கு அம்மா இல்லை. அப்போதுதான் என்னுடைய மனைவிக்குப் புரிந்திருக்கிறது. அம்மாவை மனதுருக வேண்டியதால் இரவு என் குடும்பத்திற்குக் காவலாக வந்துள்ளார்கள் .

பாதயாத்திரையை முடித்து அம்மாவிடம் ஆசிபெறும்போது அம்மா என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே “சென்றுவா!” என்று கூறினார்கள் . காவலுக்கு வந்து சென்ற அம்மாவிற்குக் கோடானு கோடி வணக்கம் நன்றியுடன் கூறிக் கொள்கிறேன்.

சில நாள் கழித்து அம்மா சென்னையில் உள்ள மன்றங்களுக்கு அருளாசி வழங்குவதற்கு, சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள வீட்டில் தங்கியிருந்தார்கள் . அம்மாவின் கார் ஓட்டுனர் சக்தி முனுசாமி பால் வாங்குவதற்கு அங்கு வந்தார். அப்போது நான் அவரைச் சந்தித்து விசாரித்தேன். கார் ஓட்டுனர் சக்தி முனுசாமி விவரத்தைக் கூறினார்.

அவரிடம், ‘எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று மிகுந்த ஆவலோடு நாங்கள் பசும் பால் வழங்குவதற்கு அனுமதி கொடுங்கள் ’ என்று கேட்டுக் கொண்டதின் பேரில் அவரும் ஒப்புக்கொள்ள, இந்த அரிய தொண்டினைச் செய்வதற்கு அம்மா அவர்களுக்குப் பசும் பால் காலை, மாலை, இரண்டு நேரமும் கொடுத்துத் தொண்டு புரிந்தோம்.

ஒருநாள் மாலை நேரம் பால் கொண்டு சென்ற எனது மனைவியிடம் அம்மா அவர்கள் , “உன் வீட்டிற்கு அம்மா வரும்“ என்று ஆசி வழங்கி அனுப்பியுள்ளார்கள் . என்னுடைய மனைவி அம்மா கூறியதை என்னிடம் தெரிவித்தார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

திடீரென்று ஒருநாள் காலை சுமார் 9 மணியளவில் கார் ஓட்டுனரிடம், “வண்டியை எடு! பால்காரன் வீட்டிற்கு போக வேண்டும்“ என்று கூறி அம்மா எங்களுடைய வீட்டிற்கு வந்து ஆசி வழங்கினார்கள் . இது நாங்கள் செய்த சிறு தொண்டிற்கு அம்மா வழங்கிய மிகப் பெரிய பரிசு. அம்மா எங்களுடன் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அவர்களது காலத்தில் நாங்களும் வாழ்ந்து கொண்டு வருகிறோம்.

உண்மையான தொண்டிற்கு அம்மா என்றும் கைவிடமாட்டார்கள் என்கிற விவரத்தை இப்போதுள்ள அனைத்து செவ்வாடை சக்திகளும் புரிந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அன்னையைப் பணிந்து வணங்கி அம்மா அவர்களின் அருளாசியினை மேலும் தொடர்ந்து எதிர்பார்க்கும் சக்திகள் நாங்கள் எனக்கூறி எங்கள் அனுபவத்தைத் தெரிவித்துள்ளோம்.