அம்மாவின் ஆன்மிக விதைப் பயணங்கள்

Published : 2016-03-19 04:55:00 | Author : கே.வி.எம் உடன் கே.எஸ்.ஜெ.

ரு தொண்டர்கள் காபி, தேநீர் சாப்பிட மாட்டார்கள் . ஒரு தொண்டர் சென்னையைச் சேர்ந்தவர். ஏங்க நீங்க எல்லாம் காபி சாப்பிடுங்க. அந்த நேரத்தில் காபி சாப்பிடாத நாங்க ரெண்டு பேரும் போய் மெட்ராசுக்குப் போன் செய்து பார்த்து நாளைக்கு நாங்கள் அங்கு வராமலேயே எங்கள் வேலையை முடித்துக் கொள்ள முடியுமா? எனக்கேட்டு அவர்கள் முடியும் என்றால் நானும் உங்கள் அனைவரோடும் ஊருக்கு வருகிறேன் என்று அவரது சென்னை அலுவலகத்துக்கும் போன் செய்வதற்காகப் புறப்பட்டு விட்டார்கள் .

விசாரித்ததில் போன் செய்ய வேண்டுமானால் சுமார் 2 கி.மீ தூரம் செல்ல வேண்டும். அதனால் அவர்களிருவர் மட்டும் ஒரு வண்டியை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்கள் .

அந்த இடம் போக்குவரத்து மிக நெரிசலான பகுதி என்பதனால் அவர்கள் தங்களுடைய வண்டியை ஒரு சிறிய பாதையில் ஒதுக்குப்புறமாக நிறுத்திவிட்டு அங்குள்ள காவல் துறையினரை அணுகிக் கேட்டபொழுது அவர்கள் இன்னும் சற்றுத் தொலைவிலுள்ள ஒரு கட்டிடத்தைக் காண்பித்து அங்கு சென்று போன் செய்யுமாறு கூறினார்கள் .

பக்கம்தானே என எண்ணி அவ்விரு தொண்டர்களும் நடந்தே சென்று கொண்டிருக்கும் வேளையில் ஒரு வெள்ளை நிற ‘மாருதி வேன்’ ஒன்று அசுர வேகத்தில் வந்து ஒருவர் மீது இந்நேரம் மோதியிருக்க வேண்டும்.

நல்லவேளை அத்தொண்டர் ஏதோ ஒரு உணர்வு பெற்று ஒதுங்கிக் கொண்டதால் உயிர் பிழைத்தார். அம்மாவுக்கு மனதில் நன்றி கூறிவிட்டு மறுபடியும் நடக்க ஆரம்பித்தபொழுது மறுபடியும் அந்த வேன் அவர்கள் மீதே மோத வந்தது. மறுபடியும் ஒதுங்க மறுபடியும் மோத வரவேதான் அவர்களுக்கு மனதில் உதிர்த்தது, அந்த வேன் நம் மீது வேண்டுமென்றே மோத வருகின்றது என்பது. எனவே அவர்கள் உடனே நடைபாதை மேடையில் சட்டென ஏறிக் கொள்ளவே அந்த வேன் ‘திட்டு’ மீது மோதி நின்றதுதான் தாமதம். உள்ளே இருந்த இருவர் சடாரெனக் கதவைத் திறந்து, ‘ஏண்டா டேய்...’ என ஆரம்பித்து நாக்கூசுகின்ற மிகத் தரக்குறைவான வார்த்தைகளால் படுமட்டரகமாக அர்ச்சித்தார்கள் .

அத்தொண்டர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. இவர்கள் நம்மை ஏன் இடிக்க வந்தார்கள் ? எதற்காகத் திட்டுகிறார்கள் ? என்ன காரணம் என்றே புரியவில்லை. இதே பழைய ஆட்களாக இவர்கள் இருந்திருந்தால் அத்தொண்டர்கள் இந்நேரம் நடந்திருக்கும் முறையே வேறாக இருந்திருக்கும்.

ஆனால் அவர்களை எவ்வளவு தூரம் அம்மா அப்போது பக்குவப்படுத்தியிருக்கின்றார்கள் என்பது விளங்கியது. தவறே செய்யாத நம்மைக் கொல்லத் துணியுமளவிற்கு இவர்களுக்குக் கோபம் வரக் காரணம் என்ன? என்றுதான் சிந்தித்து கொண்டிருந்தார்களேயொழிய, வசை மொழி கேட்டு வஞ்சம் தீர்க்க எண்ணவில்லை.

‘அம்மா! இது என்ன சோதனை’ என எண்ணியபோதுதான் வசை பாடியவர்கள் வாயிலிருந்து வந்தது அதற்கான விடை. ‘டேய் மைசூர்ல ஒங்க திறமையைக் காட்டினீங்கடா... இது எங்க பேட்டை. ஒங்கள நீங்க தங்கியிருக்கிற எடத்துக்கே படையோட வந்து உங்களையெல்லாம்.... மா? இல்லையா பாருங்கடா...?’ என்று மறுபடியும் மகா மட்டரகமான வார்த்தைகளால் கொட்டி விட்டு ‘சர்’ரென்று வேனை ஓட்டிச் சென்றனர்.

இப்பொழுது அத்தொண்டர்களுக்கு ஒரு குழப்பம். இது யாரோ இரண்டு பேர் குடித்துவிட்டு கலாட்டா செய்ததைப் பெரிதாக எடுத்துக் கொண்டு மறுபடியும் அம்மா தங்கியிருக்கும் விடுதிக்குச் சென்று சொல்லிக் களேபரப்படுத்துவதா? ஒருவேளை வந்தவர்கள் வெறும் வாய்ச் சவடால் பேர்வழிகளாயிருந்து வராமல் போய்விட்டால் நமது நிலைமை அருவருப்பாய் விடும். அல்லது இவர்கள் கையாலாதவர்கள் என நினைத்து நாம் போய், பெரிய கலாட்டா செய்து விட்டால் என்ன செய்வது? என்பதுதான் அக்குழப்பம்.

எது எப்படியிருந்தாலும் சரி, நமக்குத் தெரிந்தபின் நாம் சும்மா இருப்பது சரியல்ல. அதனால் நாம் பழையபடிக்கு ஓட்டலுக்குச் சென்று உஷார் படுத்திவிடுவதுதான் நல்லது என்று பழையபடி திரும்பி நடந்து வந்து வேறிடத்தில் நிறுத்தி வைத்திருந்த வண்டியை எடுத்துக் கொண்டு அனைவரும் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றனர்.

அங்கு சென்று பார்த்தால் ஒரே நிசப்தம். அத்தனை கார்களும் அமைதியாக நின்று கொண்டிருந்தன. எல்லா ஓட்டுநர்களும் வழக்கத்திலில்லாத அமைதியுடன் ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டதைப் போல்நின்று கொண்டிருந்தனர். அவர்களில் பொறுப்பான ஒருவரை அழைத்து, ‘மைசூரில் என்ன நடந்தது’ எனக் கேட்டவுடன், ‘அண்ணே! மைசூர்ல நாம இருந்தப்ப ஒரு வெள்ளை மாருதி வேன்காரங்க வேணு மின்னே நம் கூடத் தகராறுக்கு வந்தாங்க. வாக்குவாதம் முற்றிப்போய் நாங்கள் நிறைய பேர் இருப்பதைப் பார்த்து ‘உங்களை கவனிக்கிற இடத்தில் கவனித்துக் கொள்கிறோம்’னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. அதே ஆளுங்க இப்ப இங்க வந்தாங்க. நம்ம கார் நம்பரையெல்லாம் குறிச்சிட்டுப் போயிருக்காங்க. அது மட்டுமில்லாம மறுபடியும் நிறைய ஆட்களோடு வந்து ஒரு கை பார்க்கிறோம் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கின்றார்கள் .

இப்பொழுது என்ன செய்வதென்றே புரியவில்லை. ஏதாவது கலாட்டா கிலாட்டா ஆயிருச்சுன்னா அம்மா மனசு என்ன பாடுபடும்? இதை அம்மாகிட்ட எப்படிப் போய்ச் சொல்றதுன்னு நினைச்சோம். அதுக்குள்ள நீங்க வந்திட்டீங்க. இப்ப என்ன பண்றது?’ என்றார்.உடனே அறநிலையைச் சேர்ந்த சில முக்கியமானவர்களை மட்டும் அழைத்து சுருக்கமாக நடந்ததைக் கூறி ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அந்தத் தொண்டர்கள் கேட்டுக் கொண்ட அடுத்த கணமே அறநிலை அன்பர் ஒருவர் கேட்டது, ‘அண்ணே! உங்க சகோதரிகள் , மற்ற சக்திகள் எல்லாம் எங்கே?’ என்றது தான். அவர்கள் தேநீர் விடுதியில் இருக்கிறார்கள் என்றதுமே, அவர் அவசரமாக, ‘மொதல்ல அவங்களையெல்லாம் உடனே வண்டியை அனுப்பி கூட்டிவாருங்கள் . இன்று நீங்கள் இங்கே தங்குகிறீர்கள் . இந்தப் பிரச்சனை முடியும் வரை நீங்கள் இங்கிருந்து புறப்பட வேண்டாம்’ என்பதுதான். அதே போல் அனைவரும் திரும்ப வந்து விட்டனர்.

விசயத்தைக் கேள்விப்பட்டு அங்கு அக்கம்பக்கத்திலிருந்த உள்ளூர் வாசிகளும், பணியாளர்களும், ‘சக்தி... நீங்க ஏங்க கவலைப்படறீங்க... எங்களை மீறி யாரும் ஒங்கள ஒண்ணும் செய்ய முடியாது. அதற்கு மீறி ஏதேனும் நடக்க வேண்டுமென்றால் எங்களனைவரின் கடைசி சொட்டு ரத்தத்தையும் மீறித்தான் யாரேனும் உங்களை ஏதாவது செய்து விட முடியும்’ என்றதுமே எங்கள் அனைவரின் கண்களும் நனைந்தன.

மாநிலம் விட்டு மாநிலம் வந்து அங்கெல்லாம் எப்படியெப்படிச் சகோதர உணர்வுகளை ‘அம்மா’ ஆன்மிகத்தால் ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்பொழுது மனது நிறைவாக இருந்தது.மறுபடியும் அவர்கள் ‘போங்க சக்தி... போய்த் தூங்குங்க... நீங்க ஏன் கண் விழிக்கணும்? நாங்க பார்த்துக் கொள்கிறோம். எத்தனை பேர் வந்தாலும் நேர்மையான வழியில் சமாளித்துக்கொள்ளலாம்’ என்றார்கள் .

நாங்களோ ’ஏங்க சக்தி நீங்கள் எல்லோரும் எங்களுக்காக இவ்வளவு தூரம் சிரமமெடுத்துக் கொள்ளும்போது நாங்கள் போய்த் தூங்குவதா?’ என்று அவர்களோடு நாங்களும் இருந்தோம். சொல்லி வைத்தாற் போல் அவர்கள் ஒரு பெருங்கூட்டத்தோடு அணிவகுத்து வந்தார்கள் .

அவர்கள் அனேகமாக இங்கே இவ்வளவு ஏற்பாடுகள் முன்னெச்சரிக்கையாக செய்திருக்க முடியாது என நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் அத்தனை பேரையும் வாசலிலேயே தடுத்து நிறுத்திய போதுதான் தெரிந்தது, அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி வந்தது நமது தொண்டர்களோடு சண்டையிட்டது வேறு யாருமல்ல, அந்நகரின் பிரபலமான செல்வாக்குள்ள ஒரு பெரும்புள்ளியின் புதல்வரும், டிரைவரும் என்பது.

உடனே நம் நண்பர்கள் , அந்நேரத்திற்கு அந்தப் பெரும்புள்ளியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த விபரத்தைக் கூறியபோது அவர் கூறியது, ‘என்ன என் மகன் அம்மாவோடு வந்தவர்களோடா சண்டையிட்டான். அவன் சார்பாக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

தயவு செய்து நடந்ததையெல்லாம் இந்நேரத்திற்கு அம்மாவுக்குத் தெரிவித்து அம்மாவைத் தொந்தரவு செய்யாதீர்கள் . நானே காலையில் நேரில் அம்மாவிடம் வந்து அம்மா என் மகன் இப்படி நடந்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். அவர்களுடைய கண்ணீரால் அம்மாவின் பாதங்களைக் கழுவ வைக்கின்றேன்’ என்று தெரிவித்துவிட்டு அவர்களைத் தொடர்பு கொண்டு அவர் ஏதோ சொல்ல... என்ன ஒரு ஆச்சரியம்! சற்று முன்பு வரை முரடர்களைப் போலிருந்த அவர்கள் மிகவும் மென்மையானவர்கள் போல் மாறித் தங்கள் செயலுக்கு வருத்தமும் தெரிவித்துச் சென்றார்கள் .

எந்த ஒரு விபரமும் அம்மாவுக்குத் தெரியாமல் அவரவர் தத்தம் கடமைகளைச் செய்தபோது அம்மா அவர்கள் தன் கடமையை எப்படிச் செய்து ஒரு இனிமையான முடிவைத் தந்தார்கள் பார்த்தீர்களா?


அம்மாவுடன் செல்லும்போது நாமெல்லாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நமக்கெல்லாம் இது ஒரு பாடம். நம் மீது தவறில்லையென்றால் கூட நமக்கு வாக்குவாதம் தேவையில்லை என்பது படிப்பினை. அம்மா நமக்குக் கற்றுத்தரும் சகிப்புத் தன்மையால் எதையும் சாதிக்க முடியும் என்பது நமக்குக் கிடைத்த விளக்கம்.அம்மாவுடன் செல்லும்போது நாமெல்லாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நமக்கெல்லாம் இது ஒரு பாடம். நம் மீது தவறில்லையென்றால் கூட நமக்கு வாக்குவாதம் தேவையில்லை என்பது படிப்பினை. அம்மா நமக்குக் கற்றுத்தரும் சகிப்புத் தன்மையால் எதையும் சாதிக்க முடியும் என்பது நமக்குக் கிடைத்த விளக்கம்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இருந்தன அந்தக் கணவானின் வாத்தைகள் , ‘சக்தி! நானும் அம்மா பக்தன்தான். யார் யாருக்கோ அம்மா எப்படியெப்படியோ அருள் கொடுக்கின்றார்கள் . என் மகனுக்கு இப்படி ஒரு நாடகமாடி அருள் கொடுக்கின்றார்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள் ’ என்று பக்தியுணர்வுடன் கூறியதுதான்.

எல்லாம் இனிதாக முடிந்து அனைவரும் நிம்மதியாக அம்மாவை நினைத்து மனதால் நன்றி சொல்லிப் படுக்கச் சென்றபோது நேரம் இரவு பத்து மணியாகிவிட்டது. பிறகு கொஞ்ச நேரத்திற்குள் பாரதநாட்டையே குலுங்க வைத்த ஒரு பெரும் துயரச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது தெரியவந்தது. தேசமே சோகத்தில் ஆழ்ந்திருந்த போது ஆங்காங்கே நடந்த வன்முறைச் சம்பவங்கள் சொல்லி முடியாதது. ஒருவேளை இரவு பத்து மணிக்கு மேல் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தால், அம்மாவிடம் விடைபெற்றுச் சென்ற அத்தொண்டர்கள் கதி என்னவாகியிருக்கும்...?

சென்னை, பெரியார், கோவை, திருச்சி, சேலம் மாவட்டத்தைச் சார்ந்த அவர்கள் மனைவி மக்களுடன் நடுவழியில் நிர்க்கதியாய் தவித்து, உடைமைகளை இழந்து என்னென்ன பாடுபட்டிருப்பர்? அவர்களெல்லாம், கேட்டா அம்மா அவர்களைக் காப்பாற்றினார்கள் ...?!

“என்னையே நினைத்துச் சரணடைபவனை இளகிய வெண்ணெயில் விழுந்த ஈ போல் அணைப்பேனடா மகனே!” என்று அன்னை கூறுவது எவ்வளவு பொருத்தம். அன்னையினுடைய செயல்களில்தான் எத்தனை எத்தனை பலன்கள் . அம்மாவினுடைய பாதங்களைச் சரணடைவது நமது கடமை. நம்மைக் கரையேற்றுவது அம்மாவின் கடமை. அடுத்த நாள் முழுவதும் அனைவரையும் அம்மா அங்கே தங்க வைத்து விட்டார்கள் . அந்தச் சூழ்நிலையிலும் அத்தனை தொண்டர்களுக்கும் தவறாமல், குறைவில்லாமல் வேளாவேளைக்கு அமுதளித்து கர்நாடக மாநில, பெங்களூர் மாவட்டச் செவ்வாடைத் தொண்டர்கள் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டார்கள் .

அன்று முழுவதும் அம்மாவின் முகபாவனைகள் இதுவரை நாம் கண்டிராதது. அதற்கு அர்த்தம் விளக்க நம்மால் இயலாது. அதற்கடுத்த நாள் காலையிலேயே அம்மா அவர்கள் புறப்பட உத்தரவிட்டு விட்டார்கள் .

நொடிப்பொழுதில் அனைவரும் கிளம்ப, அம்மா, ‘இப்படியே ஓசூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, செஞ்சி, திண்டிவனம் வழியா நம்ம எல்லையை அடைந்துவிடலாம் சார்” எனப் பயணத் திட்டத்தை அம்மாவே வகுத்துத் தந்தார்கள். திருஷ்டி சுற்றிக் கிளம்பியதும் கர்நாடக மாநில எல்லை வரை அம்மாநிலச் செவ்வாடைத் தொண்டர்கள் அணி வகுத்து வந்து எல்லையில் அன்னையின் ஆசி பெற்றுச் சென்றார்கள் . பரபரப்பான அந்நாளில் அன்னையுடன் சென்ற அப்பயணமானது எங்களது வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாகும். ஒவ்வொரு பயணத்திலும் அம்மாவுடைய ‘காரினை’ பைலட் வண்டிகள் வழிநடத்திச் செல்லும். ஆனால் அன்று அம்மாவினுடையவாகனம் அனைவருக்கும் முன்சென்று அனைவரையும் வழி நடத்திச் சென்றது.

திடீரென்று அம்மாவின் கார் 100 கி.மீ. வேகத்தில் செல்லும். ஒரு சில இடத்தை 80 கி.மீ வேகத்தில் கடக்கும். சில இடங்களுக்கு 40 கி.மீ வேகத்தில் செல்லும். சில இடங்களில் அன்னையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத வண்டிகள் தத்தமது இயந்திரத் திறனுக்கு ஏற்ப பகுதி பகுதியாகப் பிரிந்து செல்லும். கடைசியில் அன்னை காத்திருந்து அனைவரும் வந்தவுடன் மறுபடியும் வழி நடத்திச் செல்லும். இந்நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சூட்சுமம் இருப்பது அனுபவித்தால்தான் தெரியும்.

அம்மா 100 கி.மீ வேகத்தில் ஒரு இடத்தைக் கடக்கும் பொழுது அப்பொழுதுதான் ஒரு வன்முறைக் கும்பல் கல்லெறிய வந்து கொண்டிருக்கும். அக்கும்பல் கல்வீசுவதற்குள் வாகனங்கள் கடந்துவிடும். இன்னொரு இடத்தில் மரத்தை வெட்டிப் போட்டிருப்பார்கள் . அம்மா 40 கி.மீ வேகத்தில் மெதுவாகச் செல்வதற்கும் அவர்கள் புறப்பட்டுப் போவதற்கும் சரியாக இருக்கும்.

சில இடத்தில் வேடிக்கை பார்க்கும் சிறுவர்கள் ஒட்டுமொத்தமாகச் செல்லும் ஊர்திகளைப் பார்த்தால் விசமத்தனம் செய்யத் துணிவார்கள் . சில இடங்களில் கல்லெடுத்து எங்கள் வாகனங்களில் எறிவார்கள் அவை எங்கள் வாகனங்களில் படாது.

ஆனால் அம்மாவின் வாகனமோ எந்தவித இடையூறுமின்றி அலுங்காமல் குலுங்காமல் அற்புதமாய்ச் சென்று கொண்டிருந்த கோலம் கண்டு மகிழ்வுறத்தக்கது. உண்மையில் சொல்லப்போனால் அது ஒரு ‘த்ரில்லிங்’கான பயணம். ஒவ்வொரு ‘த்ரில்லிங்’குக்கும் ஒரு ‘கிளைமேக்ஸ்’ இருக்கும் என்பார்களே அதைப் போன்றதோர் மற்றுமொரு மறக்க முடியாத நிகழ்ச்சி நடைபெற்றது. அது என்ன...?